மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தந்தை-மகன் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது வேன்மோதியதில் தந்தை-மகன் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா சர்வராஜன்பேட்டையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 51), கூலிதொழிலாளி. இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள உறவினர்களுக்கு பத்திரிகை வழங்குவதற்காக தனது மகன் இளமாறனுடன் (20) மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் தனது வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரம் ரோட்டில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளங்கோவன், இளமாறன் ஆகிேயாரை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளங்கோவன் மேல்சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வேன் டிரைவர் தழுதாழை மேடு வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.