மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை


மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை
x

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை-ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவு

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயது கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கடந்த 31.8.2021-ல் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.


Next Story