சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

திருச்சி

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

14 வயது சிறுமி

திருச்சி வையம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 14 வயது மகளை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த சிறுமியின் உறவினர்கள் அந்த சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். இதற்கு அவர் இது பற்றி யாரிடமாவது கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

விசாரணை

அதன்பேரில் போலீசார், தொழிலாளி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி மகிளா கோர்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

5 ஆண்டு சிறை தண்டனை

இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி என்.எஸ் ஸ்ரீவத்சன், தொழிலாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.


Next Story