கொத்தமங்கலத்தில் விருந்து கொடுத்து உபசரிப்பு


கொத்தமங்கலத்தில் விருந்து கொடுத்து உபசரிப்பு
x

கொத்தமங்கலத்தில் விருந்து கொடுத்து உபசரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகே மாங்காடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மின்விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீற்றிருக்க பெண்கள் ஆரத்திக்குடங்களுடன் முன்னாள் செல்ல வாணவேடிக்கைகளுடன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாளை (சனிக்கிழமை) பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிலையில் பொங்கல் விழா மற்றும் தேரோட்ட திருவிழாவில் கொத்தமங்கலம் கிராமத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரு குடியிருப்பு மக்களுக்கு மாங்காடு கிராமத்தின் சார்பில் நேரில் சென்று அழைப்பு கொடுப்பது வழக்கம். அதே போல நேற்று திருவிழாவிற்கு அழைப்பதற்காக சென்ற போது கொத்தமங்கலத்தில் வரவேற்பு கொடுத்ததுடன் அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்தனர். தொடர்ந்து 6-ந்தேதி தேரோட்டத்திற்கு கொத்தமங்கலத்திலிருந்து குதிரையில் சீர் கொண்டு செல்லும் நிகழ்வுகளும் நடக்க உள்ளது. திருவிழாவிற்கு அழைக்க வந்த கிராமத்தினருக்கு விருந்து கொடுத்து உபசரித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story