சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை, கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை, கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம நிர்வாக ஊழியருக்கு இணையாக சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story