வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின் படி முத்திரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை வாபஸ் பெறக்கோரி கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெங்கடேஷ்வரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், புதூர் தலைவர் செந்தில், விளாத்திகுளம் தலைவர் கனகமணி, எட்டயபுரம் இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் கண்ணன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story