வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பார் உரிமையாளர் சாவு


வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த   பார் உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு இலந்தைக்குளத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பார் உரிமையாளர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

வடக்கு இலந்தைகுளம்:

வடக்கு இலந்தைகுளத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த பார் உரிமையாளர் பரிதாபமாக இறந்து போனார்.

பார் உரிமையாளர்

கயத்தாறு அருகே உள்ள செவ்வாய்பரி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த மருதபாண்டியன் மகன் மாடசாமி (வயது 36). இவர் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் பார் ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் மாடசாமி சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவர், திடீரென்று நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாடசாமிக்கு லெட்சுமி(30) என்ற மனைவியும், பிரதீப்(6) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story