உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்
உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 69-வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள சங்க வளாகத்தில் நடந்தது. சங்கத்தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார். செயலாளர் மங்களராஜ் சங்கத்தின் வரவு-செலவு மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை, தேர்தல் அதிகாரியாக இருந்து கருணாகரன் நடத்தினார். நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சங்க உறுப்பினர்கள் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் உள்ள காலியான இடங்களில் மீண்டும் வெற்றிலை விவசாய பயிர்களை பயிரிட வேண்டும், தாம்பூல கவரிலும், விசேஷ காலங்களிலும் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும், புகையிலை இல்லாத வெற்றிலையின் பயன்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், வெற்றிலை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.