பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குமரியில் அதிகரித்துள்ளது


பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குமரியில் அதிகரித்துள்ளது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என கலெக்டர் அரவிந்த் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நேற்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியபோது கூறியதாவது:-

நம் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை எடுத்துரைப்பது தான் தேசிய பெண்குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும். இந்தியாவில், சிறுமிகள் சிறு வயதிலிருந்தே வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். கல்வியைத் தொடர வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

பெண் கல்வி உயர்வு

பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் அணுகு முறையை மாற்றுவது, பெண் சிசுக்கொலைகளை தடுப்பது மற்றும் பாலின விகிதம் குறைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் முக்கிய கவனம் மேற்கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் பெண் கல்வி மிகவும் சிறப்பான முறையில் உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் சிவப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, சமூகநல அலுவலர் சரோஜினி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, தனித்துணை கலெக்டர் திருப்பதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story