செஞ்சி அருகே கிணற்றில் பெண் பிணம் போலீஸ் விசாரணை


செஞ்சி அருகே  கிணற்றில் பெண் பிணம்  போலீஸ் விசாரணை
x

செஞ்சி அருகேகிணற்றில் பெண் பிணமாக கிடந்தாா். இதுகுறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சியை அடுத்த வல்லத்தை சேர்ந்தவர் பலராமன். அந்த பகுதியில் உள்ள இவரது விவசாய கிணற்றில் சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story