பாலியல் தொல்லையால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருக்கோவிலூர் அருகே பாலியல் தொல்லையால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி கொழுந்தனார் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மனைவி செல்லம்மா(வயது 26). இவருக்கு சுமார் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான பழக்கடையில் அதே பகுதியை சேர்ந்த தணிகாசலத்தின் சித்தப்பா ஏழுமலை மகன் விஜயகாந்த்(26) என்பவர் உதவிக்காக அவ்வப்போது வந்து செல்லும்போது செல்லம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதை அவர் கடித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் தனது வீட்டுக்கு வந்த விஜயகாந்த் செல்லம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த செல்லம்மாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.