அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை


அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை
x

அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 30), கூலி தொழிலாளி.

இவரது உறவினரான 80 வயது முதியவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த முதியவரை வெம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பெருமாள் அழைத்து சென்றார்.

புறநோயாளிகள் பிரிவில் பெண் டாக்டர் ஒருவர் பணியில் இருந்தார். அவர் பெருமாள் அழைத்து சென்ற முதியவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

அப்போது பெருமாள் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் அலறி கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமாளை மடக்கி பிடித்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்துஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பெருமாளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பெருமாள் பெண் டாக்டரிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story