தனியார் மருத்துவக்கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
தனியார் மருத்துவக்கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
மதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய பெண். இவர் மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் வேலையை முடித்து விட்டு அந்த கல்லூரி அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து மிரட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்த பெண் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story