வரதட்சணை கேட்டு பெண் என்ஜினீயர் சித்ரவதை


வரதட்சணை கேட்டு பெண் என்ஜினீயர் சித்ரவதை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் திருமணமான ஓராண்டில் வரதட்சணை கேட்டு பெண் என்ஜினீயரை சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி திருவதிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் ராயர்(வயது 55). இவருடைய மகள் அஸ்வினி(25). என்ஜினீயரான இவருக்கும், அரியலூர் சமத்துவபுரத்தில் வசித்து வரும் பரமானந்தம் மகன் ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு ஆனந்தபாபு குடும்பத்தினர் அஸ்வினியை சித்ரவதை செய்துள்ளனர்.இதனால் அஸ்வினி, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று ஆனந்தபாபு, பரமானந்தம், இவரது மனைவி மீனா ஆகிய 3 பேரும் அஸ்வினியின் வீட்டிற்கு வந்து வரதட்சணை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஸ்வினி கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தபாபு உள்பட 3 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story