தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே அரசு வேலை கிடைக்காததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

புவனகிரி அருகே உள்ள கிளாங்காட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). இவரது மகள் கிருஷ்ணாதேவி (28). எம்.எஸ்சி. படித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இருப்பினும் அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணாதேவி தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கிருஷ்ணாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிருஷ்ணாதேவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story