ஓசூரில் பெண் சிசு சாவு; போலீசார் விசாரணை


ஓசூரில் பெண் சிசு சாவு; போலீசார் விசாரணை
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மரியாளம் பகுதியை சேர்ந்தவர் முனேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 13-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்தது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் மூர்த்தி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் சிசு இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story