திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் கைதி சாவு


திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் கைதி சாவு
x

திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் கைதி இறந்தார்.

திருச்சி

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரய்யா மனைவி பானு (வயது 59). இவர் நகைக்காக தனது நாத்தனாரை கொலை செய்த வழக்கில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். மேலும் இவர் நீண்ட நாட்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 8-ந்தேதி பானுவின் உடல்நிலை மிகவும் மோசமானது. உடனே அவரை மகளிர் சிறை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை பானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மகளிர் சிறை போலீஸ் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி, பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.


Next Story