அரவை எந்திரத்தில் சிக்கி பெண் நூலகர் பலி


அரவை எந்திரத்தில் சிக்கி பெண் நூலகர் பலி
x

அரவை எந்திரத்தில் சிக்கி பெண் நூலகர் பலியானார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் தானிய வகைகள் அரைக்கும் அரவை மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி (வயது 50). இவர் திருப்பத்தூர் அடுத்த இருணாபட்டு பகுதியில் இயங்கி வரும் நூலகத்தில் நூலகராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று நூலகம் விடுமுறை என்பதால் அரவை மில்லில் கன்னிகா பரமேஸ்வரி தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் கிடந்த துப்பட்டா அரவை எந்திரத்தில் சிக்கியது. இதனால் கன்னிகா பரமேஸ்வரியின் கழுத்தை துப்பட்டா இறுக்கி அரவை எந்திரத்தின் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகே இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வரவழைத்தனர். விரைந்து வந்த சுகாதார நிலைய மருத்துவர், கன்னிகா பரமேஸ்வரியை பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்காயம் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story