பெண் அதிகாரியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் அதிகாரியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர், ஆக.5-
திருப்பத்தூர் பெண் அதிகாரியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துணை வட்டார வளர்ச்சி அதிகாரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியைச் சேர்ந்த கணேசன் மகன் கமலேஷ் (வயது 35) டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா கந்திலி துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் திருப்பத்தூர் டவுன் இ.எல்.ராகவனார் தெரு பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். நேற்று காலை கவிதா வழக்கம் போல பணிக்குச் சென்றிருந்தார். 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
மாலையில் பணி முடிந்த பின் கவிதா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் கமலேஷ் தூக்குப்போட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கவிதா அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கும் தெரியவரவே போலீசார் விரைந்து வந்து கமலேஷ் உடலை கைப்பற்றினர்.
முதல் கட்ட விசாரணைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்ககாக உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.