வாணியம்பாடியில் மகளிர் காவலர் தினத்தையொட்டி பெண் போலீசார் கவுரவிப்பு


வாணியம்பாடியில் மகளிர் காவலர் தினத்தையொட்டி பெண் போலீசார் கவுரவிப்பு
x

வாணியம்பாடியில் மகளிர் காவலர் தினத்தையொட்டி பெண் போலீசார் கவுரவிக்கப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

மகளிர் காவலர் தினத்தையொட்டி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் பெண் போலீசார் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. மிட்டவுன் ரோட்டரி கிளப் சார்பில நடந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். வெங்கடேசன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் காவலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் பெண் போலீசாருக்கு பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் இசுலாமியா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்பட பலர் கலந்துக் கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story