பெண் பலி; தம்பதி படுகாயம்
மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
விருதுநகர்
திருச்சுழி,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் பாலசுந்தர் (வயது31). இவருடைய மனைவி செல்வாம்பிகா (25). பாலசுந்தரின் அம்மா சரோஜா (55). இவர்கள் 3 பேரும் ஒரே காரில் சரோஜாவின் மகளான அருப்புக்கோட்டையில் வசிக்கும் நித்யா என்பவரை தங்களது ஊரான கன்னிராஜபுரத்திற்கு அழைத்து செல்வதற்காக வந்தனர். காரை பாலசுந்தர் ஓட்டினார். இந்தநிலையில் பரளச்சி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசுந்தர், செல்வாம்பிகா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story