பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாப்பாரப்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள மேல் என்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி மங்கம்மாள் (வயது 55). இவர் தனது மகன் அருள்காந்தியுடன் மேல்‌என்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த ஆடு முட்டியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தனது மருமகளின் துப்பட்டாவால் மங்கம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியில் சென்றிருந்த மகன் அருள்காந்தி வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மங்கம்மாள் பிணமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story