பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி சாரதா (வயது 42). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சாரதா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story