பெண் தற்கொலை
பெண் தற்கொலை
விருதுநகர்
திருச்சுழி,
திருச்சுழி அருகே சென்னல்குடியை சேர்ந்த சந்தனம் மனைவி வள்ளி (வயது 65). கூலி வேலை செய்து வந்தார். இவர் 10 வருடமாக கால் வலியினால் நடக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இந்தநிலையில் கால்வலி தாங்காமல் வீட்டிற்கு முன் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதுகுறித்து சந்தனம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story