பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

மகன் இறந்த துக்கத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மனைவி சீதா (வயது 55). இவர்களது மகன் பாண்டி. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சீதா, விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சீதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story