பெண் தற்கொலை
பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிறுநிலா காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி கலையரசி (வயது 28). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரதாப்(4) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலையரசி, பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெளியில் சென்றிருந்த வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கலையரசியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதியும் விசாரணை நடத்தி வருகிறார்.