பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வௌ்ளியணையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வயிற்று வலி
கரூர் மாவட்டம், வெள்ளியணை தங்கம்மா கோவில் பகுதியை சேர்ந்தவர் கவின். இவரது மனைவி கீதா (வயது 30). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு சாத்விக் (6) என்ற மகனும், ஆதவி (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் கீதாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லையாம்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று முன்தினமும் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கீதா வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை தாழிட்டு, மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று கீதாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோட்டாட்சியர் விசாரணை
இதையடுத்து கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து கீதாவின் தாய் ராணி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கீதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கரூர் கோட்டாட்சியர் ரூபினாவும் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.