தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி சி.பி.எஸ். நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் முத்துசாமி மதுகுடித்து விட்டு ராஜலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமியின் தம்பி கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story