தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பாபநாசம் வங்காரம்பேட்டை வன்னியர் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (வயது40). கொத்தனார். இவரது மனைவி பார்வதி (32). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவர்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பார்வதி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பார்வதியின் தந்தை செந்தில்குமார்(53) பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பார்வதி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.