மண்டைக்காட்டில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மண்டைக்காட்டில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மண்டைக்காட்டில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு புதூர் சி.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவருடைய மனைவி சிசிலி (வயது 70). இவர்களுடைய மகன் டேவிட் அருள்தாஸ். பிரகாசம் ஏற்கனவே இறந்து விட்டார். அதனால் சிசிலி மகன் டேவிட் அருள்தாசுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சிசிலிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டேவிட் அருள்தாஸ் மீன் பிடிக்கும் தூண்டிலை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சிசிலி படுக்கையறை மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதுபற்றி தகவலறிந்ததும் டேவிட் அருள்தாஸ் வீட்டிற்கு ஓடி வந்து தாயை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு சிசிலி ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இதுபற்றி டேவிட் அருள்தாஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிலி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story