தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அவனியாபுரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
அவனியாபுரம்,
அவனியாபுரத்தை அடுத்து வள்ளைனந்தபுரம் ஜெ.ஜே நகரை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி மாலினி (வயது 25). இவர்களுக்கு ஹர்ஷரி என்ற ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. விஜய் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று செல்போனில் பேசும் போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து சம்பவத்தன்று இரவு மாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாலினியின் தந்தை கருப்பையா அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story