பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திட்டக்குடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 32). இவருக்கும் தொளார் கிராமத்தை சேர்ந்த கிரேசி(23) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கிரேசி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தொளார் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் அசோக்குமார், தனது மாமியாா் செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து செல்வி தனது மகளுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இருப்பினும், தனது கணவர் வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லாத கிரேசி, வீட்டில் உள்ள ஒரு அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.