தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). இவர்களுக்கு ரவி, வீரன்சுந்தரலிங்கன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு ரவி இறந்தார். இதனை தொடர்ந்து அவரது தாய் மாரியம்மாள் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரியம்மாள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமர் தனது மனைவி மற்றும் மகனுடன் சரஸ்வதிபாளையத்துக்கு சென்று விட்டார். அங்கு வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளப்பட்டிக்கு வந்த மாரியம்மாள் அங்கு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story