தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

சிவகாசி அருகே தூக்குப்ேபாட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள பூச்சக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் அதே பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் குழாய்களை தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் வாசுகி (வயது 20). பி.எஸ்.சி. படித்து முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை ஆனந்தராஜ் மற்றும் அவரது மனைவி வழக்கம் போல் குழாய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சம்பவ இடத்துக்கு சென்று வாசுகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story