தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி லட்சுமி (வயது 34). 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியின் கணவர் இறந்து விட்டார். லட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் போலீசார் தகவலின் அடிப்படையில் உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story