தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகள் கல்யாணி (வயது 24). இவரை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கணேசன் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளிக்கு ஊருக்கு வந்த இவர் வேலைக்கு செல்லாமல் தினசரி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கல்யாணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்யாணியின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சேத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story