தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே கணவர் பேசாமல் இருந்ததால் மனமுடைந்து தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மனைவி அமராவதி (வயது 25). இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. அதன்பின்பு சுருளிவேல், தனது மனைவியிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அமராவதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story