தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்ெகாலை செய்து கொண்டார்.
சாத்தூர்,
விருதுநகர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் கனகலட்சுமி (வயது 47). இவரது மகள் பானுமதி (25). இவருக்கும் குண்டலகுத்துரை சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து பானுமதிக்கு போன் செய்தபோது போன் பிசியாக இருந்துள்ளது. இதனால் அவர் சந்தேகத்தின் பேரில் பானுமதியை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது அம்மாவிடம் கூறியதோடு மன வேதனையில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பானுமதி தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே கனகலட்சுமி அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பானுமதி இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கனகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.