பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் காந்திகிராமம் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி கல்பனா (வயது 37). இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கல்பனா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story