தூக்குப்போட்டு பெண் தற்கொலை
புத்தாண்டு கொண்டாட தாய் வீட்டுக்கு போகாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம்
புத்தாண்டு கொண்டாட தாய் வீட்டுக்கு போகாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 29) நர்சிங் பயிற்சி முடித்து உள்ளார்.
இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராஜனிடம், புத்தாண்டு கொண்டாட வேலூர் தாலுகா மோட்டுப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு போகலாம் என ராஜேஸ்வரி கேட்டுள்ளார்.
அதற்கு ராஜன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜன் வெளியே சென்றுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி தூக்குப் போட்டு கொண்டார்.
பின்னர் ராஜன் வந்து பார்த்தபோது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.,
இதுகுறித்து ராஜன் தனது மாமனார் பாலசுப்பிரமணிக்கு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தனது மகள் ராஜேஸ்வரி சாவில் சந்தேகம் இருப்பதாக பாலசுப்பிரமணி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.