தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப.கொந்தகை திருமலைராஜன் பட்டினம் ரோட்டை சேர்ந்தவர் ராஜவேலு. இவருடைய மனைவி வனஜா (வயது45). கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வனஜா மனஉளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனஜா தூக்குப்போட்டு கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வனஜாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story