பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புன்னம் சத்திரம் அருகே கணவர் இறந்த மன உளைச்சலில் இருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
தூக்கில் தொங்கிய பெண்
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே உள்ள பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 36). இந்த தம்பதியின் மகன் ஹரிபிரகாஷ் (18). இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த மன வேதனையில்மஞ்சுளாசரியாக சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டனர். அந்த நேரம் பார்த்து இரவு தனியாக படுத்திருந்த மஞ்சுளா அருகாமையில் உள்ள அவர்களது பழைய வீட்டிற்கு சென்று அங்குள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அப்போது ஹரிபிரகாஷ் கழிவறை செல்வதற்காக வந்தபோது படுத்திருந்த தனது அம்மாவை காணவில்லை என தேடி பார்த்துள்ளார்.
போலீசார் விசாரணை
அப்போது அவர்களது பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது மஞ்சுளா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மஞ்சுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஹரிபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.