தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடபொன்பரப்பி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

கள்ளக்குறிச்சி

வடபொன்பரப்பி

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புத்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சஞ்சீவி(வயது 21). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சஞ்சீவியின் தந்தை தர்மலிங்கம், தனது மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் மருமகன் ராமகிருஷ்ணன், அவரது தந்தை ராமசாமி, தாய் ஜெயக்கொடி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சஞ்சீவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story