தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2023 12:30 AM IST (Updated: 30 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூமா (24). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பூமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூமாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளாவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story