தூக்குக்போட்டு பெண் தற்கொலை


தூக்குக்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குக்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள நடராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மணிராஜ். இவரது மனைவி மைதிலி (வயது 30). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மணிராஜிக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மைதிலி சம்பவத்தன்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மைதிலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து மணிராஜ் கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story