தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் பாண்டியன்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சண்முகத்தாய். இந்த நிலையில் ஆறுமுகத்தின் மகளுக்கு திருமணம் நடந்து விட்டது. ஆனால் மகன் சுப்புராஜூக்கு திருமணம் நடக்க வில்லை. இதனால் சண்முகத்தாய் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சண்முகத்தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சுப்புராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story