தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி தீபா (வயது 22). இவர்களுக்கு சஞ்சனாதேவி என்ற மகளும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் தீபா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தீபா இறந்துள்ளதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story