பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2023 1:00 AM IST (Updated: 30 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

மேச்சேரி:-

ஜலகண்டாபுரம் அருகே மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி மீனா (வயது 28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மீனாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உடல்நிலை சரியில்லாததால் தனது கணவருடன் தனது தந்தை வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக மீனா வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் மீனாவின் பிணம் தொங்கி கொண்டு இருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு மீனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story