பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வளவனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வளவனூர்,
வளவனூர் அருகே ராம்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். லாரி டிரைவர். இவரது மனைவி தீபா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்துக்கு சென்றார். இதையடுத்து தனது கணவரிடம் செல்போன் மூலம் பலமுறை பேச தீபா முயன்றுள்ளார். ஆனால் சரவணன் செல்போனை எடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தீபா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீபாவின் அண்ணன் தங்கராசு வளவனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.