தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திட்டச்சேரியை அடுத்த எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி மேனகா (வயது 25). இவருக்கு சாகித்யன் (வயது 10) என்ற மகனும், நந்தினி (8) என்ற மகளும் உள்ளனர். முருகவேல், மைசூரில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் குழந்தைகள் 2 பேரையும் பூந்தோட்டத்திற்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு பள்ளி விடுமுறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இதனால் மேனகா மட்டும் கோதண்டராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காலனி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மாலை மேனகாவை அவரது தந்தை தமிழார்வன் வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை மேனகா போன் எடுக்காததால் அவரது சகோதரி மாலினி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அங்கு வீட்டில் தூக்கில் மேனகா பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேனகா உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.